அபிராமி அந்தாதி - உரை - அறிமுகம்
அபிராமி அந்தாதி ஓம். 'அபிராமி அந்தாதி' என்ற இந்த நூலை இயற்றியவர் அபிராம பட்டர். 'அபிராமி' என்ற சொல் 'மிக்க அழகுடையவள்' என்று பொருள்படும். எனவே, பேரழகு வாய்ந்த அம்பிகையைப் பற்றிய அந்தாதி என்பது பொருள். ஏற்கெனவே பலரும் அபிராமி அந்தாதிக்கு விளக்கம் மற்றும் உரை எழுதியிருக்கிறார்கள். ஏராளமான இணையதளங்களிலும் இதில் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் மூலமும் உரையும் காண முடிகிறது. ஏன் மேலும் ஒரு உரை? - வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் - திண்டுக்கல் சண்முகநாதன் - பருத்தியூர் சந்தானராமன் - கவியரசர் கண்ணதாசன் - பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு போலி ஆன்மீகவாதி போன்ற பலரும் எழுதிய அபிராமி அந்தாதி உரை நூல்கள் பிரபலம். அபிராமி அம்மன் இந்த அவசர யுகத்தில், மேலே சொன்ன உரைகளைத் தேடி, வாங்கிப் படிக்கும் ஆர்வமும் மிகவும் குறைந்து விட்டது. இந்த உரைகளில் உள்ள வார்த்தைகளுக்குக் கூட எல்லோருக்கும் முழுமையான அர்த்தம் தெரியுமா என்பதே சந்தேகம் எனும் அளவுக்கு நம்மிடையே தமிழ் அறிவு குறைந்து வருகிறது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட பலருக்கும் கூட, இது போன்ற உரைநூல்களின் வரிகளைப் படித...