Posts

Showing posts from May, 2024

அபிராமி அந்தாதி பாடல் #5 - உரை

Image
[மனக்கவலை மறைந்திட] பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5 புரை = உயர்வான, மேலான, மூத்த (புரை உயர்வு ஆகும் - தொல்காப்பியம் 2-8-4). முப்புரை = திரிபுரை, மும்மடங்கு மேலானவள்  #626 செப்புரை : செப்புக் கிண்ணங்களை போன்ற புணர்முலை புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்: மருங்குல் = இடுப்பு. : முலை:ஸ்தன பாரங்கள். சிவபெருமானைக் கூடுவதால் அழுந்திய முலைகளால் வருந்திய இடுப்பை உடையவள்; வஞ்சிக் கொடி போன்றவள். வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora cordifolia. இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. வல்லி என்றால் கொடி என்று அர்த்தம். அமிர்தவல்லி (Tinospora Cordifolia) பாடல் 100ல் 'குழையத் தழுவிய கொன்றை அந்தார் கமழ் கொங்கை வல்லி': சிவபெருமானைத் தழுவுவதால் அவர் அணிந்திருக்கும் கொன்றைத் தாரின் வாசனை அம்பாளுடைய ஸ்தன பாரங்களில் படிந்திருக்கும் என்றும், கொடி  போன்றவள் ...

கல்லைக் கண்டா நாயைக் காணோம்

Image
 கல்லைக் கண்டா நாயைக்  காணோம் "கல்லைக் கண்டா நாயைக்  காணோம், நாயைக் கண்டா கல்லைக் காணோம்" என்று, நம்மில் பலருக்கும் தெரிந்த பழமொழி/சொலவடை ஒன்று உண்டு. தெருவில் சுற்றித் திரியும் நாயைப் பார்த்ததும் அதை அடித்து விரட்டுவதற்காக அவசரமாகத் தேடும்போது சட்டென்று உடனே கல் எதுவும் கிடைக்காது, கல்லைத் தேடிக் கண்டுபிடித்து எடுப்பதற்குள் நாய் ஓடி விடும்" என்ற தவறான அர்த்தத்தில் பலர் இதைப் புரிந்துகொண்டுள்ளனர். இந்தப் பழமொழி உண்மையில்  உருவ வழிபாட்டின் அடிப்படையை விளக்குகிறது. இதை ஒரு சின்னக் கதை சொல்லி விளக்குகிறார் காஞ்சி மஹா பெரியவர் (தெய்வத்தின் குரல்): மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை ஒரு சின்னக் குழந்தை பார்த்தால் "இது யானை" என்று சொல்லும். மரம் அதன் கண்ணுக்குத் தெரியாது.  அதே பொம்மையை மரவேலை, மரங்களைப் பற்றி அனுபவம் உள்ள தச்சர் பார்த்தால் 'இது இன்ன மரம்' என்று சொல்வார்.அவர் கண்ணுக்கு யானை தெரியாது. மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை; பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே. - திருமூலர்.#2290. எட்டாம் தந்திரம் ...