அபிராமி அந்தாதி பாடல் #3 - உரை
சம்சார பந்தம் நீங்க அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே. திருவே! வெருவிப் பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. மறை : வேதம். நான்மறை என்றால் நான்கு வேதங்கள் என்று அர்த்தம். மிகவும் நுணுக்கமான ஆன்மீக விஷயங்களை, வெளிப்படையாக இல்லாமல் சூசகமாக, மறைமுகமாக, உருவகங்களையும் (metaphor) குறியீடுகளையும் (symbolism) கொண்டு விளக்குவதால் இந்தப் பெயர். இதனால் தான் "எழுதா மறை", "எவரும் அறியா மறை" என்கிறார் அபிராம பட்டர். [Vedas are the ultimate knowledge/philosophy explained using metaphors/symbols with hidden meanings.] ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் நமது வேதங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடங்களில், இவை இறைவனைத் துதிக்கும் பாடல்களின் தொகுப்பு, தொகுதி ("The Vedas are a collection of sacred hymns") என்று இந்தியவியல் (Indology) அறிஞர்கள் கூறுகின்றனர். "இயற்கையைக் கண்டு பயந்த, வியந்த பண்டைய இந்தியர்கள், அந்த இயற்கை சக்திகளை வெவ்வேறு தெய்வங்களாக, கடவுள்களாகக் கற்பனை செய்து அவர்...