Posts

அபிராமி அந்தாதி பாடல் #5 - உரை

Image
[மனக்கவலை மறைந்திட] பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே. 5 புரை = உயர்வான, மேலான, மூத்த (புரை உயர்வு ஆகும் - தொல்காப்பியம் 2-8-4). முப்புரை = திரிபுரை, மும்மடங்கு மேலானவள்  #626 செப்புரை : செப்புக் கிண்ணங்களை போன்ற புணர்முலை புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல்: மருங்குல் = இடுப்பு. : முலை:ஸ்தன பாரங்கள். சிவபெருமானைக் கூடுவதால் அழுந்திய முலைகளால் வருந்திய இடுப்பை உடையவள்; வஞ்சிக் கொடி போன்றவள். வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora cordifolia. இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. வல்லி என்றால் கொடி என்று அர்த்தம். அமிர்தவல்லி (Tinospora Cordifolia) பாடல் 100ல் 'குழையத் தழுவிய கொன்றை அந்தார் கமழ் கொங்கை வல்லி': சிவபெருமானைத் தழுவுவதால் அவர் அணிந்திருக்கும் கொன்றைத் தாரின் வாசனை அம்பாளுடைய ஸ்தன பாரங்களில் படிந்திருக்கும் என்றும், கொடி  போன்றவள் எ

கல்லைக் கண்டா நாயைக் காணோம்

Image
 கல்லைக் கண்டா நாயைக்  காணோம் "கல்லைக் கண்டா நாயைக்  காணோம், நாயைக் கண்டா கல்லைக் காணோம்" என்று, நம்மில் பலருக்கும் தெரிந்த பழமொழி/சொலவடை ஒன்று உண்டு. தெருவில் சுற்றித் திரியும் நாயைப் பார்த்ததும் அதை அடித்து விரட்டுவதற்காக அவசரமாகத் தேடும்போது சட்டென்று உடனே கல் எதுவும் கிடைக்காது, கல்லைத் தேடிக் கண்டுபிடித்து எடுப்பதற்குள் நாய் ஓடி விடும்" என்ற தவறான அர்த்தத்தில் பலர் இதைப் புரிந்துகொண்டுள்ளனர். இந்தப் பழமொழி உண்மையில்  உருவ வழிபாட்டின் அடிப்படையை விளக்குகிறது. இதை ஒரு சின்னக் கதை சொல்லி விளக்குகிறார் காஞ்சி மஹா பெரியவர் (தெய்வத்தின் குரல்): மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை ஒரு சின்னக் குழந்தை பார்த்தால் "இது யானை" என்று சொல்லும். மரம் அதன் கண்ணுக்குத் தெரியாது.  அதே பொம்மையை மரவேலை, மரங்களைப் பற்றி அனுபவம் உள்ள தச்சர் பார்த்தால் 'இது இன்ன மரம்' என்று சொல்வார்.அவர் கண்ணுக்கு யானை தெரியாது. மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை; பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்; பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே. - திருமூலர்.#2290. எட்டாம் தந்திரம்

அபிராமி அந்தாதி பாடல் #4 - உரை

Image
[உயர் பதவிகள் பெற்றிட] மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனி தரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனி தரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.  சென்னி = தலை. சிரம். மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ( குனிந்து ) தலை வணங்கும் ( சேவடி ) சிவந்த அடிகளை உடையவள். #463 வது திருநாமம் "ஸுர நாயிகா": தேவர்களின் தலைவி என்று அர்த்தம். ஈரோடு அருகே சென்னிமலை என்று பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த முருகனை "சிரகிரி வேலவன்" என்று (கந்த சஷ்டி கவசத்தில் ) சொல்லுவார் தேவராய ஸ்வாமிகள். சென்னி மலையே சிரகிரி. முனிவர்கள் தங்களின் தவ வலிமையால் பல்வேறு சித்திகளும் வரங்களும் கைவரப் பெற்றவர்கள். அதனால் மாயா முனிவர் என்றார்.  மாயாத முனிவர், அதாவது இறப்பு என்பது இல்லாத, சிரஞ்சீவியான ரிஷிகள் என்றும் சொல்லலாம். சிவபெருமான் 8 விதமான வீரத் திருவிளையாடல் புரிந்த "அஷ்ட வீரட்டானத் தலங்களில்" ஒன்று திருக்கடையூர். இங்கு தான் மார்க்கண்டேய முனிவரைக் காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து "கால சம்ஹார மூர்த்த

அபிராமி அந்தாதி பாடல் #3 - உரை

Image
 சம்சார பந்தம் நீங்க அறிந்தேன் எவரும் அறியா மறையை. அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே. திருவே! வெருவிப் பிரிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.  மறை : வேதம். நான்மறை என்றால் நான்கு வேதங்கள் என்று அர்த்தம். மிகவும் நுணுக்கமான ஆன்மீக விஷயங்களை, வெளிப்படையாக இல்லாமல் சூசகமாக, மறைமுகமாக, உருவகங்களையும் (metaphor) குறியீடுகளையும் (symbolism) கொண்டு விளக்குவதால் இந்தப் பெயர். இதனால் தான் "எழுதா மறை", "எவரும் அறியா மறை" என்கிறார் அபிராம பட்டர். [Vedas are the ultimate knowledge/philosophy explained using metaphors/symbols with hidden meanings.] ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் நமது வேதங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள இடங்களில், இவை இறைவனைத் துதிக்கும் பாடல்களின் தொகுப்பு, தொகுதி ("The Vedas are a collection of sacred hymns") என்று இந்தியவியல் (Indology) அறிஞர்கள்   கூறுகின்றனர்.  "இயற்கையைக் கண்டு பயந்த, வியந்த பண்டைய  இந்தியர்கள், அந்த இயற்கை சக்திகளை வெவ்வேறு தெய்வங்களாக, கடவுள்களாகக் கற்பனை செய்து அவர்

சொர்க்கமும் நரகமும்

Image
நாடகங்களிலும் திரைப் படங்களிலும் மட்டுமே இவற்றைப் பார்த்து அறிந்து கொண்டுள்ள நம்மில் பலருக்கு இவற்றைப் பற்றிய தெளிவு இல்லை. பெரும்பாலானோர், நமது புராணங்களில் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் கூறப்பட்டுள்ள விவரங்கள், விளக்கங்களை மேலோட்டமாக, literal ஆக அர்த்தம் பண்ணி கற்பனை செய்பவர்கள் தாம். சொர்க்கம் என்பது ஆடம்பர வசதிகள் நிறைந்த, பொன்னும் மணியும் கொட்டிக்கிடக்கும் அலங்கார மாளிகை போலவும், ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற அழகான தேவலோகப் பெண்கள் நடனம் ஆடி மகிழ்விக்கும் இடம் என்றும் திரைப்படங்களைப் பார்த்து பெரும்பாலானோர் ஒரு கற்பனை உலகத்தை/பிம்பத்தை (இமேஜ்) மனதில் வைத்து இருக்கிறோம்.  இதற்கு நேர்மாறான நரகம் என்பது கொடூரமான தண்டனைகள் தரப்படும் இடம் என்று சில புராணங்களிலே சொல்லப்பட்டு இருப்பதன் அடிப்படையில் திரைப்படங்களில் வி வ ரிக்கப்பட்டு இருப்பதும் நமக்கு பரிச்சயம். உண்மையில் சொர்க்கம் , நரகம் என்றால் என்ன? இதைப்பற்றி விரிவாக விளக்குவதற்கு முன் மரணம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வது முக்கியம். மரணத்துக்குப் பின் நம்முடைய உயிர், ஜீவன் என்னவாகிறது? என்பதைப் பற்றி நம்முடைய ஹிந

அபிராமி அந்தாதி: பாடல் #2 - உரை

Image
 பிரிந்தவர் ஒன்று சேர பாடல் #2: துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின் பணையும், கொழுந்தும், பதி கொண்ட வேரும், பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே.  " துணையும், தொழும் தெய்வமும் , பெற்ற தாயும்" ஆகிய மூன்று சொற்களும், சிலேடையாக, இரண்டு அர்த்தங்கள் கொண்டதாகப் படுகிறது எனக்கு. இவை அபிராமியின் அடியவர்கள், சிவபெருமான் இருவருக்கும் பொருந்தும் என்று இங்கே கருத இடம் உண்டு: சிவபெருமானின் இடப் பாகத்தில்( பாடல் #17 ), என்றும் அவரைப் பிரியாமல் இருப்பவள். (பாடல் #8ல் "எந்தை (என் தந்தை, அதாவது சிவன்) துணைவி"  என்பார்)   சிவபெருமானே பூஜிக்கும், வணங்கும் தேவி அவள் (பாடல்  #7, #26) சிவபெருமானைப் பெற்றவள் அன்னை அபிராமி (பாடல்  #25). இதைப் பற்றிய விளக்கத்தைப் பாடல் #25ல் விரிவாகப் பார்க்கலாம். தொழுவது = வழிபாடு செய்வது #101: தொழுவார்க்கு வேண்டுவது = எதையேனும் வேண்டிக் கேட்பது, பிரார்த்தனை செய்வது  வணங்குவது  = கும்பிடுவது, தோத்திரம் செய்வது  இவை எல்லாம் ஒரே வகை அல்ல. ஒன்பது வகை பக்தி!   ச்ரவணம் கீர்த்த

அபிராமி அந்தாதி பாடல் #1 - உரை

Image
நல்வித்தையும் ஞானமும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை, துதிக்கின்ற மின்கொடி. மென்கடிக் குங்கும தோயம் என்ன? விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.  யோகத்தில் இருந்தபடி ஆழமாக தியானம் செய்பவர்களுக்கு மனக்கண்ணில் செக்கச் செவேலென்ற சிவப்பு நிறத்தில், பிரகாசமான ஒளி தெரியும். இந்த ஒளி வெள்ளத்தையே பாடல் #47ல் "சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" என்று சொல்லுவார். இதை அன்னையின் வடிவாக வர்ணிக்கும் பட்டர், நமக்கு புரிவதற்காக, நாமும் அந்த தரிசனத்தை visualize செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். சிவப்பு நிறம் உள்ள, மேன்மையான  விஷயங்களை இங்கே லிஸ்ட் போடுகிறார்.  லலிதா ஸஹஸ்ர நாமத்தில், நாமாவளியை ஆரம்பிக்கும் முன்பாகச் சொல்லும் த்யான ஸ்லோகத்தின் தொடக்கமே " ஸிந்தூரானன விக்ரஹாம் " என்று தான் வரும். ஸம்ஸ்க்ருதத்தில்  "ஆனன" என்றால் முகம். கஜானன என்றால் யானை முகன். ஸிந்தூரானன என்றால் குங்குமம் போன்ற சிவந்த முகம் என்று அர்த்தம். அபிராம பட்டரும் தன்  முதல் பாடலிலேயே அதையே சொல்கிறார். அபிராமி அந